search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயதான தம்பதி"

    • தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.
    • விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

    தெலுங்கானா மாநிலம் மாவட்டம் மகபூபாபாத் தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சமீதா நாயக் (வயது 80). இவரது மனைவி கோகுலத் லாலி (70).

    தம்பதியினர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    அப்போது காதல் வயப்பட்ட இருவரும் பெற்றோரின் கடும் எதிர்ப்பை தாண்டி திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களது பெற்றோர் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இருவரும் அந்த காலத்தில் கந்தர்வ முறைப்படி மாலை மாற்றி மட்டும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    காலப்போக்கில் கடுமையாக உழைத்து மனைவியை காப்பாற்றி வந்த நாயக் அதன் பிறகு மகன்கள், மகள்களுக்கு, திருமணம் செய்து வைத்தார்.

    இப்படியே காலம் உருண்டோட குடும்பம் பேரன், பேத்திகள் என பெரிதாகி விட்டது. 60 ஆண்டுகள் ஆனாலும் தனது கணவர் தனக்கு தாலி கட்டவில்லையே என்ற ஏக்கம் கோகுலத் லாலிக்கு ஏற்பட்டது.

    தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.

    ஆனாலும் விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

    இதையடுத்து தனது பிள்ளைகளிடமும் பேரன், பேத்திகளிடமும் கூற அவர்களும் மகிழ்ச்சியுடன் இதனை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து உறவினர்கள் புடை சூழ திருமணம் நடந்தது. 60 ஆண்டுகளாக தன்னுடன் மனைவியாக வாழ்ந்த மூதாட்டிக்கு உற்றார் உறவினர் மட்டுமல்லாது தான் பெற்ற பிள்ளைகள், பேரன், பேத்திகள் முன்னிலையில் கை நடுங்கியபடி முதியவர் தாலி கட்டினார்.

    அப்போது மணப்பெண் அலங்காரத்தில் இருந்த மூதாட்டி வெட்கத்தில் தலை குனிந்தார்.

    தொடர்ந்து அக்கினியை வலம் வந்து தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.

    அவர்களிடம் மகன், மகள்கள், பேரன், பேத்திகள் ஆசிபெற்றனர்.

    • வயதான தம்பதி இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வயதான தம்பதி இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, உணவு, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

    இதனால் அங்குள்ள தமிழர்கள் பலர் அகதிகளாக தமிழகத்திற்கு வர தொடங்கினர். கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு சுமார் 100 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

    இலங்கையில் இருந்து இரவு நேரத்தில் படகு மூலம் குடும்பம் குடும்பமாக வந்து தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல்திட்டுகளில் தவித்தப்படி நின்ற அவர்களை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் எதிரே உள்ள மணல் திட்டில் வயதான தம்பதி இருவர் மயங்கி கிடந்தனர். இலங்கையில் இருந்து அகதியாக வந்த அவர்களை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.

    விசாரணையில் அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டம் பிருங்கன்பட்டியை சேர்ந்த சிவன் (வயது 82), அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் கூலி வேலை பார்த்து வந்த அவர்கள், அங்கு நிலவிய விலைவாசி உயர்வால் வாழ முடியாத நிலை ஏற்பட்டு தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

    அவர்களை படகில் அழைத்து வந்தவர்கள் இரவு நேரத்தில் ஆழம் குறைந்த தண்ணீரின் நடுவே இறக்கி விட்டு சென்றதால், வழி தெரியாமல் நடந்து வந்து மணல் திட்டு பகுதிக்கு வந்திருக்கின்றனர். பின்பு வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து செல்ல முடியாமல் மயங்கி விட்டனர்.

    அவர்கள் கிடந்த பகுதிக்கு ஆம்புலன்சு செல்ல முடியாது என்பதால் ஹோவர்கிராப்ட் கப்பல் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்பு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் வயதான தம்பதி இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வயதான தம்பதி இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×